உலகம்

அமெரிக்காவை அதிர வைத்த துப்பாக்கிசூடு; மனம்திறந்த ட்ரம்ப்

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வாஷிங்டன் ஹில்டன் ஓட்டலில் அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 25, 2026 இரவில், வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு திடீரென மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்

துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்தை அடுத்து அதிபர் ட்ரம்பை பாதுகாவலர்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர். ட்ரம்ப் நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய நபரை பொலிஸார் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது:- துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் யாருக்கும் காயமில்லை. தாக்குதல் நடத்தியவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகளால் நாங்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றப்பட்டோம். துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்த நிலையில் பாதுகாப்பு படையினர் துணிச்சலுடன் துரிதமாக செயல்பட்டனர்.

என்னைக் கொல்ல நடந்த முயற்சி இது முதல்முறையல்ல, 2 ஆண்டுகளுக்கு முன்பும் என்னை கொல்ல முயற்சி நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *