இலங்கை

தந்தை செல்வாவுக்கு நினைவுப்பேருரை ஜீ.எல். பீரிஸ் – பாவச்செயல்களின் உச்சம் என கடுமையாக சாடிய மணிவண்ணன்

தமிழ் தேசிய தந்தை செல்வநாயகத்தின் 49 ஆவது நினைவுப் பேருரையில் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்றுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை என்றுதமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமாதான பேச்சுக்கள் தொடக்கம் கடந்த ஆட்சிவரை பேரினவாதிகளுக்கு தலைமை தாங்கியவரே ஜீ.எல். பீரிஸ் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்ற, அதற்காக பணியாற்றுகின்ற சர்வதேச ஆளுமைகளை கொண்டுவந்து தந்தை செல்வா தொடர்பில் நினைவுப்பேருரை நடத்துவதே சிறப்பானதாக அமையும்.

இது முரண்நகையாக இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *