ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிடவில்லையென தகவல்

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) பாகிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிடவில்லையென, ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோதலை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில், இஸ்லாமாபாத் ஒரு இடைநிலை பாலமாக செயல்பட முடியும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையெ, நேரடி பேச்சுவார்த்தையை விரும்பும் ஈரானின் நிலைப்பாட்டை முன்னிட்டு, அமெரிக்கா தனது தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோரை இஸ்லாமாபாத்திற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை முன்னதாக அறிவித்திருந்தது.
அப்பாஸ் அராக்சி வெள்ளிக்கிழமை மாலை பாகிஸ்தான் சென்றடைந்தார். ஈரான்–பாகிஸ்தான் இருதரப்பு விவகாரங்களை மீளாய்வு செய்வதே இந்த பயணத்தின் நோக்கம் என பாகிஸ்தானிலுள்ள ஈரானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க மற்றும் ஈரானிய தரப்புகளின் பிரதிநிதிகள் இந்த வார இறுதியில் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தனித்தனியாக சந்திப்புகளை நடத்தவுள்ளதாக ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சந்திப்புகள் சுமூகமாக இடம்பெற்றால், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகள் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
![]()