இலங்கை

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான சாட்சியங்கள் பதிவு

மன்னார் மாவட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை முன்னடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது  மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் கலந்து கொண்டதோடு, மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களை தேடும் நூற்றுக்கணக்கான உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Gallery

மன்னார் மாவட்டத்தில் இதுவரை காணாமல் போனவர்கள் தொடர்பாக 612 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவற்றில் 427 விண்ணப்பங்களுக்கான பூர்வாங்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அவற்றுக்கான இடைக்கால நிவாரணம், காணாமல் போனதற்கான சான்றிதழ், மரண சான்றிதழ் என்பவற்றை வழங்கியுள்ளதாக காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலக பிரதி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *