முச்சந்தி

7 ஆண்டுகள் கடந்தும் நீதிக்காக பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்; மட்டக்களப்பில் கருத்தாடல்!

ஏழு ஆண்டுகள் கடந்தும் நீதிக்காக பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்ற தொணிப் பொருளின் கீழ் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பிலான கருத்தாடல் நிகழ்வொன்று நேற்றயதினம் (21.04.2026) மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நடைபெற்றது.

கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் புகாரி முகம்மட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் நேரடியாகவே பாதிப்புற்றவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், மதத்த தலைவர்கள், ஊடகவிலாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஏழு வருடங்கள் கடந்தும் தற்போதைய அரசாங்கம் இந்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளது. எனினும் இதுதொடர்பில் சர்வதேச ரீதியிலான சுயாதீன விசாரணைக்குழு ஒன்றின் மூலம் இவ்விசாரணையை முன்னெடுத்தல், தாக்கதலில் பாதிப்புற்றவர்களின் வைத்திய சிகிச்சை, அவர்களின் போக்குவரத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள், இழப்பீடுகள், போன்ற பல விடையங்கள் தெடர்பில் இதன்போது ஆராயப்பட்டன.

இறுதியில்; ஜனாதிபதி, பிரதமர், மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்காக பரிந்துரைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் இதன்போது வெளியிடப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *