உலகம்

ஹோர்முஸ் நீரிணை எமது முழுக் கட்டுப்பாட்டிலுள்ளது; ஈரான் சபாநாயகர் தெரிவிப்பு 

அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் இரு தரப்புக்கும் “ஒருவரை ஒருவர் அதிகமாக உணரக்கூடிய நிலையை” உருவாக்கியுள்ளன என்று அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் ஈரான் குழுவை வழிநடத்தும் சபாநாயகர் முகமது பகர் கலிபாஃப் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

அதே நேரத்தில் இரு தரப்பும் இறுதி ஒப்பந்தத்திற்கு இன்னும் தொலைவில் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், இன்னும் முக்கியமான இடைவெளிகள் உள்ளன, சில அடிப்படை பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தேசிய நலன்களை அடைவதற்காக இராணுவ நடவடிக்கையும், தூதரக பேச்சுவார்த்தையும் இரண்டும் முக்கியமானவை எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, அமெரிக்கா சிறிய தவறு செய்தாலும் நாங்கள் வலிமையுடன் பதிலளிப்போம் என எச்சரித்தார்.

அமெரிக்காவை விட ஈரான் தந்திர ரீதியாக மேலான நிலை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். நாம் எதிரியை முழுமையாக அழிக்கவில்லை அவர்களிடம் இன்னும் பணமும் ஆயுதமும் உள்ளது.ஆனால் தந்திர ரீதியாக அவர்கள் எங்களிடம் தோல்வி கண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கடைசி பேச்சுவார்த்தை சுற்றில் பாகிஸ்தானில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ்க்கு, ஈரானுக்கு அமெரிக்காவை நம்பிக்கை இல்லை என்பதை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

அமெரிக்கா ஈரானிய மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், ஹோர்முஸ் நீரிணை “இஸ்லாமிய குடியரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என அவர் தெரிவித்தார்.

இது கடின நிலைப்பாட்டாளர்களை திருப்திப்படுத்தும் கருத்தாக பார்க்கப்படுகிறது. இறுதியாக, புதிய உச்ச தலைவர் ஆதரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நமது நாடு பாதிக்கப்பட வேண்டாம் என்றால், நீங்கள் உச்ச தலைவரை ஆதரிக்க வேண்டும். இன்று அது நமது கடமை என அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *