உலகம்

ரஷ்ய எரிபொருள் கட்டமைப்புகள் மீது உக்ரைன் அதிரடி தாக்குதல் ; 8,80,000 பீப்பாய்கள் காலி

ரஷ்யாவின் போர் வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய வருவாய் ஆதாரமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் ஆளில்லா வானூர்திகள் மூலம் அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

சமாரா பிராந்தியத்தில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், கிரிமியாவில் உள்ள எரிபொருள் கிடங்கு மற்றும் பால்டிக் கடல் துறைமுகம் ஆகியவை இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள வைசோட்ஸ்க் (Vysotsk) துறைமுகத்தில் ஏற்பட்ட தீயை அணைத்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்கள் மூலம் ரஷ்யாவின் தினசரி எண்ணெய் விநியோகத்தில் சுமார் 8,80,000 பீப்பாய்கள் வரை குறைந்துள்ளதாக யுக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நோவோகுய்பிஷேவ்ஸ்க் மற்றும் சிஸ்ரான் ஆகிய நகரங்களில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்பட்டுள்ளன.

மேலும், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் 22 ஆளில்லா வானூர்திகளைச் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறினாலும், அங்குள்ள எரிபொருள் தொட்டி தீப்பற்றி எரிந்துள்ளதை யுக்ரைன் உறுதிப்படுத்தியுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *