முச்சந்தி
பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ஏன் தோல்வி ?…. ஈரான் அணுஆயுத திட்டத்தை தொடர உறுதி!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் முக்கிய மூன்று விவகாரங்களில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது)பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த வாரம் ஏப்ரல் 10இல் நடைபெற்ற 21 மணி நேர நீண்ட அமைதிப் பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. அணு ஆயுதத் திட்டம் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடுகளால், இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.
பாகிஸ்தான் பேச்சு தோல்வி
பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியால் ஈரான் மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா மீண்டும் திட்டமிட்டுள்ளது. போட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 28-ம் திகதி முதல் அமெரிக்கா – ஈரான் இடையே போர் நடைபெற்று வந்தது. ஆனால் ஏப்ரல் 8ம் திகதி இரு தரப்பும் இணைந்து இரு வாரங்களுக்கு தற்காலிக போர்நிறுத்தத்தை அமல் செய்தன.

இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியின் முக்கிய காரணமாக அமைந்தது ஈரான் அணுஆயுத திட்டத்தை தொடர உறுதி செய்ததுடன்,
ஒருபோதும் கைவிட மறுப்பு தெரிவித்துள்ளமை தான்.
தோல்வி அடைந்த 21 மணி நேர அமைதி ஆலோசனையில் இருதரப்பு இடையே எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. அமெரிக்கத் தரப்பில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான குழுவும் பங்கேற்றன.
தோல்விக்கான காரணமாக ஈரான் அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியதை, ஈரான் ஏற்க மறுத்ததால் உடன்பாடு எட்டப்படவில்லை என்று அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஈரானின் உறுதியான நிலைப்பாடு:
யுரேனியத்தை செறிவூட்டும் திட்டமான அணு ஆயுத கைவிட ஈரான் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்ந்து ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த நீரிணை வழியாக செல்லும் சரக்கு, எண்ணெய் கப்பல்களுக்கு சுங்கவரி விதிப்போம் என்று ஈரான் அறிவித்துள்ளது.அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்ட சேதத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரான் தரப்பு கோரியது. இந்த மூன்று விவகாரங்களால்தான் அமைதிப் பேச்சு தோல்வியில் முடிந்தது.
இதன் அடுத்த கட்டமாக ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தையை சுமூகமாக நடத்த பாகிஸ்தான் முயற்சி செய்தாலும், உடன்பாடு ஏற்படாதது ஏமாற்றத்தை அளிப்பதாக பாகிஸ்தான் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தோல்விக்குப் பிறகு, இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதால், அடுத்து வரும் நாட்களில் போர் சூழல் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
ஈரான் அணுசக்தி திட்டம் :
தற்போது அமெரிக்கா அழித்திட முனையும் ஈரானின் அணுசக்தி திட்டம் (Nuclear program of Iran) என்பது பல ஆராய்ச்சி தளங்கள், இரண்டு யுரேனியம் சுரங்கங்கள், ஒரு ஆராய்ச்சி அணு உலை மற்றும் மூன்று அறியப்பட்ட யுரேனிய செறிவூட்டல் நிலையங்கள் உள்ளிட்ட யுரேனியம் செயலாக்க வசதிகள் ஆகியவற்றை கொண்டது ஆகும்.
சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) சரிபார்ப்புக்கு உட்பட்டு அதன் அணுசக்தித் திட்டத்தை உருவாக்கியது. 1970 ஆம் ஆண்டில் ஈரான் அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையை ஒப்புக்கொண்டது.
அமெரிக்காவின் உதவியுடன் 1950 களில் சமாதான திட்டத்திற்கான அணுக்களின் பகுதியாக
ஈரானின் அணுசக்தி திட்டம் பல ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. இதில் இரண்டு யுரேனியம் சுரங்கங்கள், ஒரு ஆராய்ச்சி அணுசக்தி மற்றும் யுரேனியம் செயலாக்க வசதிகள் ஆகியவை அடங்கும், இதில் மூன்று அறியப்பட்ட யுரேனிய செறிவூட்டல் நிலையங்கள் உள்ளன.
ஈரானின் அணுசக்தி திட்டம் பல ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. இதில் இரண்டு யுரேனியம் சுரங்கங்கள், ஒரு ஆராய்ச்சி அணுசக்தி மற்றும் யுரேனியம் செயலாக்க வசதிகள் ஆகியவை அடங்கும், இதில் மூன்று அறியப்பட்ட யுரேனிய செறிவூட்டல் நிலையங்கள் உள்ளன.உயர்மட்ட பேச்சுவார்த்தை:
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான உயர் நிலைக் குழுக்கள் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து அமெரிக்கா, ஈரான் குழுவினர் நாடு திரும்பினர்.
சர்வதேச அளவில் இந்த பேச்சுவார்த்தை பற்றி பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்தன. ஈரான் உடனான நீண்ட நேர பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என்பது பல நாடுகளுக்கும் பெரும் கவலையாக இருந்தது.
இது ஈரானிய மக்களுக்கும் மோசமான செய்தி ஆகும். அணு ஆயுத திட்டத்தை கைவிட ஈரானிடம் அமெரிக்க வலியுறுத்தியது. இதற்கு ஈரான் தரப்பு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. அணு ஆயுத திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் என்பதே அமெரிக்காவின் பிரதான நோக்கமாகும். எங்கள் நிலைப்பாடு மற்றும் முடிவை தெளிவாக கூறிவிட்டோம். இனிமேல் ஈரான் தரப்பே இறுதி முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு வான்ஸ் கூறினார்.
இதற்கு முன்னதாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஹார்முஸ் நீரிணை குறித்து அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்பது குறித்தும் அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை. அமெரிக்க துணை அதிபர் வான்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், எங்களது கோட்பாடுகளை அமெரிக்க அரசிடம் எடுத்துரைத்து உள்ளோம். ஈரானின் நம்பிக்கையை பெறுவது அமெரிக்காவின் கையில் உள்ளது. ராஜ்ஜிய ரீதியிலான அல்லது ராணுவ நடவடிக்கை மூலம் ஈரான் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் துணை பிரதமர் முகமது இஷாக் டார் இஸ்லாமாபாத்தில் கூறியபோது, அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தாலும் போர்நிறுத்தத்தை இரு நாடுகளும் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மேற்கு ஆசியாவில் நிரந்தர அமைதி திரும்ப வேண்டும் என்றார்.
அதேவேளை தெஹ்ரானில் ஈரான் வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியபோது, பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தையில், சில விவகாரங்களில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. ஆனால் முக்கிய மூன்று விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இதன் காரணமாக பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. ஈரானின் உரிமைகள், ஈரான் மக்களின் நலன்களை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது என்றார்.
சீனாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
போர் தீவிரமான சூழலில் ஈரானுக்கு தேவையான ஆயுதங்கள், வான் பாதுகாப்பு கவசங்களை சீனா தொடர்ந்து வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. அடுத்த வாரங்களில் ஈரானுக்கு கூடுதலாக ஆயுதங்களை அனுப்ப சீனா திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வாஷிங்டனில் ஈரானுக்கு சீனா ஆயுதங்களை வழங்குவது உறுதி செய்யப்பட்டால் அந்த நாடு மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க தரப்பு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தக்கூடாது. அமெரிக்கா, ஈரான் போர் மிகவும் தீவிரமான பிரச்சினை ஆகும். இதில் பதற்றத்தை தணிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் கருத்து வெளியிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
![]()