உலகம்

ஹைட்டியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி

ஹைட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரான்சிடமிருந்து ஹைட்டி சுதந்திரம் பெற்ற பிறகு 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்ட லாஃபெரியர் சிட்டாடல் (Laferriere Citadel) கோட்டையில் இந்த நெரிசல் ஏற்பட்டதாக ஹைட்டியின் நோர்ட் திணைக்களத்தின் சிவில் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் ஜீன் ஹென்றி பெட்டிட் தெரிவித்தார்.

ஹைட்டியின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான இந்தக் கோட்டையில், யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளத்தின் வருடாந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று ஏராளமான மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *