இலங்கை

தியாகி அன்னை பூபதியின் ஊர்தி தடுக்கப்படவில்லை; பாதுகாப்பு சோதனையே நடந்தது: மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி விளக்கம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் அன்னை பூபதியின் நினைவு ஊர்தி பொலிஸாரால் தடுக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த ஊர்திப் பயணம் தொடர்பாக முறையான முன் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என்றும் இதன் காரணமாக, பாதுகாப்பு நடைமுறைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் மாத்திரம் ஊர்தி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு உரிய விசாரணைகள், சோதனைகளுக்கு பின்னர் ஊர்தி தனது பயணத்தைத் தொடர அனுமதி வழங்கப்பட்டதாகவும்,

தவறான புரிதல் காரணமாகவே ஊர்தி தடுக்கப்பட்டதாகச் செய்திகள் பரவியதாகவும், சட்ட ரீதியான நடைமுறைகளைப் பின்பற்றியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *