பாராளுமன்றத்தில் சில காட்டுமிராண்டி எம்.பி.க்கள்; சமிந்த எம்.பி.கீழ்த்தரமானவர்- அமைச்சர் பிமல் கடும் சாடல்

பாராளுமன்றத்தில் காட்டுமிராண்டித்தனமாக, மிக மோசமாக.கேவலமாகப் பேசும் ஒருசில எம்.பி.க்கள் எதிர்க்கட்சியில் உள்ளனர்கள். அவர்கள் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசுகின்றனர் இவ்வாறான வர்களின் நடத்தைகளை குறித்து ஆராய்ந்து தண்டனை வழங்க சபை முவேண்டுமென சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் முப்படைச் சட்டங்களின் ஒழுங்குவிதிகள் மற்றும் அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, எதிர்க்கட்சி எம்.பி.சமிந்த விஜேசிறி உரையாற்றும் போது ஆளும் கட்சியின் பெண் எம்.பி.யை அவமதிக்கும் வகையில் மிகவும் கீழ்த்தரமான வார்த்தையை பிரயோகித்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
இவர் கடந்த பாராளுமன்றத்தில் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை பணத்திற்காக விற்பனை செய்தவர்.இவர் தான் கீழ்த்தரமானவர் என்றார்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஹர்ஷ டி சில்வா, எதிர்க்கட்சியின் எம்.பி.கீழ்த்தரமாக பேசினார் என்பதை சுட்டிக்காட்டி பிரதி அமைச்சர் கீழ்த்தரமான, சபைக்கு பொருத்தமற்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார். அவற்றை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்குங்கள். இரு தரப்பும் முறையாக செயற்பட வேண்டும் என்றார்.
இதன்போது சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர், ரிஸ்வி சாலி, சபைக்கு பொருந்தாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்குமாயின் அவை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கப்படும் என்றார்.
இதனையடுத்து எழுந்த சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சபைக்கு பொருத்தமில்லாத சொல்லை ஹன்சாட்டில் இருந்து நீக்குவதற்காக பிரதி சபாநாயகர் விடுத்த அறிவிப்பை ஏற்கிறேன். ஆனால் எதிர்க்கட்சியில் ஒருசிலர் சபையில் மிக மோசமாக நடந்துக் கொள்கிறார்கள். கீழ்த்தரமாக பேசுகிறார்கள். ஆனால் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை.
காட்டுமிராண்டித்தனமாக, மிக மோசமாக,கேவலமாக பேசும் ஒருசில எம்.பி.க்கள் எதிர்க்கட்சியில் உள்ளனர். அவர்கள் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசுகிறார்கள். இவ்வாறானவர்களின் நடத்தைகள் குறித்து ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் அதற்கான அதிகாரம் நிலையியல் கட்டளை ஊடாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதற்கு பதிலளித்த பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒழுக்கமான முறையில் பேச வேண்டும். நடந்துக் கொள்ள வேண்டும். சபைக்கு பொருத்தமில்லாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்குமாயின் அவை ஹன்சாட் பதிவிலிருந்து முழுமையாக நீக்கப்படும். பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசும் விதம் குறித்து சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு வருவேன் என்றார்.a
![]()