முச்சந்தி
போரால் சிதையும் லெபனான்: பெய்ரூட் ஆட்சி அதிகாரம் யார் கையில் ?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஈரானியப் போர் தற்போது லெபனானில் மேலும் பரவுகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஈரானியப் புரட்சிப் படைத் தளபதிகளைக் குறிவைத்துத் தாக்கியதாக இஸ்ரேல் கூறுகிறது.
லெபனானில் ஈரானியப் போர்
இதற்குமுன் ஹிஸ்புல்லாவுடன் நடக்கும் போரில் இஸ்ரேல் பெய்ரூட்டைத் பாரியளவில் தாக்கவில்லை. பெய்ரூட் மிகப்பெரிய சுற்றுப்பயணத் தலம். தற்போது அகதிகள் தஞ்சமடையும் பாரிய இடமாக மாறிவிட்டது.
இதுவரை சுமார் அரை மில்லியன் பேர் வீடுகளைவிட்டு வெளியேறி இருப்பதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும் அதிகமானோர் மாண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னைய ஈரானிய உச்சத்தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா படை இஸ்ரேல்மீது தாக்குதலைத் தொடங்கியது. அதன் விளைவாக போர் தொடங்கியது.

1975 முதல் 1990 வரை லெபனானில் பல தரப்பினரிடையே நடைபெற்ற உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை. இந்த உள்நாட்டுப் போரில் 120,000 பேர் இதுவரை கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகின்றது. 2012ஆம் ஆண்டு நிலவரப்படி, ஏறத்தாழ 76,000 மக்கள் லெபனானின் உள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர். தவிரவும் இப்போரின் காரணமாக ஒரு மில்லியன் மக்கள் லெபனானை விட்டு வெளியேறியதாகவும் மதிப்பிடப்படுகின்றது.
லெபனான் உள்நாட்டுப் போர்
1920 முதல் 1943 வரை பிரான்சிய குடியேற்றவாத அதிகாரங்களின்படி லெபனானில் அரசியலும் சமயமும் தொடர்பானவை ஆயிற்று. இந்த நாட்டு நாடாளுமன்றம் முன்னர் கிறிஸ்தவர்களே முன்னிலை வகிக்குமாறு அமைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த நாட்டில் மேற்கத்திய மரபுசார் அரசுக்கு எதிராக இடதுசாரிகளும் அரபுசார் அமைப்புகளும் பல எதிர்ப்பு இயக்கங்கள் அமைத்து போராட்டங்கள் நடத்தினர்.
1947 இல இஸ்ரேல் நிறுவப்பட்டு பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன அகதிகள் லெபனானுக்கு இடம்பெயர்ந்தமையால் நாட்டின் முஸ்லிம் மக்கள் தொகை கூடலாயிற்று. ஆட்சியிலிருந்த மரோனியக் கிறித்தவர்கள் (Maronite Christians) மேற்கத்திய நாடுகளை ஆதரிக்க இடதுசாரிகளும் அரபுசார் குழுக்களும் அரபுநாடுகளை ஆதரிக்க பனிப்போரின் போது லெபனான் நாடு பிளவுபட்டது.
லெபனானில், அரசியல் அதிகாரம் பல்வேறு மதப் பிரிவுகளுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளன. 1943-இல் லெபனான் பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்ற போது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, லெபனானின் அதிபர் மரோனைட் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவராகவும், பிரதமர் சுனி முஸ்லீமாகவும், நாடாளுமன்ற சபாநாயகர் ஷியா முஸ்லிமாகவும் இருக்க வேண்டும்.
லெபனானில் யார் ஆட்சி?
இது அந்த நேரத்தில் லெபனானில் இருந்த பல்வேறு மத குழுக்களைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கையைப் பிரதிபலித்தது. அப்போது சுனி மற்றும் ஷியா முஸ்லீம்களை விட அதிக எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் இருந்தனர். லெபனான் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் கிறிஸ்தவர்களே இருந்தனர். இருப்பினும், கிறிஸ்தவர்கள், சுனி முஸ்லீம்கள், மற்றும் ஷியா முஸ்லீம்கள் மக்கள் தொகையில் 30% சதவீதத்திற்கும் சற்று அதிகமாக இருப்பதாக தற்போது மதிப்பிடப்பட்டுள்ளதால், இந்த உடன்படிக்கை காலாவதியானது என்று பலர் கூறுகிறார்கள்.
ஆரம்பத்தில் ஏற்பட்ட உடன்படிக்கை காரணமாக கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நாடாளுமன்றில் சமமான இடங்கள் உள்ளன. ஆனால் லெபனான் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் இப்போது பெரும்பான்மையாக உள்ளனர். உண்மையில், லெபனானில் எந்தவொரு கட்சியும் அல்லது மதப் பிரிவும் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை. அரசாங்கங்கள் கூட்டணிகளால் உருவாக்கப்படுகின்றன. மேலும், அனைத்து பெரிய முடிவுகளும் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட வேண்டும். இதனால் அங்கு அடிக்கடி அரசியல் முடக்கமும் குழப்பமும் ஏற்படுகிறது.
சுனி இஸ்லாமியருக்கும் – ஷியா இஸ்லாமியருக்கும் இடையேயும், கிறிஸ்தவ – முஸ்லிம்களுக்கும் இடையேயும் நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போரில் சிரியா, இஸ்ரேல் நாடுகளும் பலஸ்தீன விடுதலை இயக்கமும் ஈடுபட்டன.
ஆனாலும் 1976இல் சிரியா மற்றும் அரபு நாடுகள் கூட்டமைப்பால் ஏற்பட்ட சிறு அமைதிக்குப் பிறகு மீண்டும் உள்நாட்டுச் சண்டை தொடர்ந்தது. முதன்மையாக பாலஸ்தீன விடுதலை இயக்கம் முதலிலும் பின்னர் இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்த தென் லெபனானில் சண்டை அதிகமாக இருந்தது. மே 17, 1983இல் அமெரிக்க ஐக்கிய நாடு ஆதரவு நல்கிய உடன்பாடொன்று லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்டது. ஆனால் சிரியா தனது படைகளை மீட்டுக் கொள்ளாததால் இந்த உடன்பாடு தோல்வியுற்றது.

உள்நாட்டுப் போருக்கு முன்னதாக லெபனான் பல சமயத்தவர் வாழும் நாடாக இருந்தது. அங்கே கடலோர நகரங்களில் சுனிகளும் கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையினராக இருக்க ஷியாக்கள் தெற்கு லெபனானிலும் பெக்கா இனத்தவர் கிழக்கிலும் துரூசு, கிறிஸ்தவர்கள் மலைப் பிரதேசங்களிலும் வாழ்ந்து வந்தனர். ஆனால் லெபனான் அரசு மரோனிய கிறித்தவர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.
மரோனியக் கிறிஸ்தவர்களுக்கும் பின்னர் பாலத்தீன விடுதலை இயக்கத்தினருக்கும் 1975இல் சண்டை மூண்டது. அதன் பிறகு இடதுசாரிகள், அரபுசார் குழுக்கள் இவர்களுடன் இணைந்து கொண்டனர். இந்தச் சண்டைகளின்போது கூட்டணிகள் விரைவாகவும் எதிர்பாரா வண்ணமும் மாறிக்கொண்டு வந்தன. மேலும் இஸ்ரேல், சிரியா போன்ற வெளிநாட்டு சக்திகளும் போரில் ஈடுபட்டு பல்வேறு தரப்பினருடன் இணைந்து சண்டையில் பங்கேற்றனர். ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படை, அமைதிக்கான பன்னாட்டு படை ஆகியனவும் லெபனானில் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டன.
1989இல் ஏற்பட்ட டைய்ஃப் உடன்பாட்டை அடுத்து சண்டை ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. ஜனவரி 1989இல் அரபு நாடுகள் கூட்டமைப்பு நியமித்த குழு சண்டைக்கான தீர்வுகளை முன்வைத்தது. மார்ச் 1991இல் பெய்ரூட் நாடாளுமன்றம் மன்னிப்புச் சட்டத்தை செயலாக்கியது. இதன்படி இச்சட்டத்திற்கு முந்தைய அனைத்து அரசியல் குற்றங்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டது.
இதன் விளைவாக மே 1991இல் பல்வேறு ஆயுதக் குழுக்கள் கலைக்கப்பட்டன. ஆனால் ஹிஸ்புல்லா மட்டுமே விலக்காக இருந்தது. லெபனானின் படைத்துறை மட்டுமே சமயச் சார்பற்ற ஒரே ஆயுதமேந்திய அமைப்பாக மீளமைக்கப்பட்டது. இருப்பினும் சண்டை நிறுத்திக்குப் பின்னரும் சுனிகளுக்கும் சியாக்களுக்கும் இடையே குழுநிலை சண்டைகள் இருந்து வந்தன.
லெபனான் ராணுவம்- ஹிஸ்புல்லா வலிமை?
கடந்த ஐந்து வாரங்களாக லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இஸ்ரேலிய துருப்புக்கள் தொடர்ந்து லெபனானில் படையெடுத்துள்ளன. இவை இஸ்ரேலுக்கும் ஹிஸ்புலாவுக்கும் இடையிலான தற்போதைய மோதலின் காரணமாக நடந்தவை.
ஹிஸ்புலா ஒரு அதிகாரப்பூர்வ அரசு அமைப்பு அல்ல. ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் லெபனானுக்குள் அது ஒரு ஆதிக்கச் சக்தியாக மாறியுள்ளது. ஹிஸ்புலா லெபனானில் இருக்கும் ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் பாரிய இராணுவ அமைப்பையும் கொண்டுள்ளது. ஆயுத ரீதியாக லெபனானின் தேசிய ராணுவத்தை விட ஹிஸ்புலா மிகவும் சக்திவாய்ந்தது. குறிப்பாக, லெபனானின் ஷியா முஸ்லிம் மக்கள் மத்தியில் அது ஆதரவைப் பெற்றுள்ளது.

ஹிஸ்புலா லெபனானில் சக்தி வாய்ந்ததாக இருப்பதற்கு அதன் ஆயுததாரிகளே காரணம். அக்குழு தங்களிடம் ஒரு இலட்சம் வீரர்கள் உள்ளனர் என்று கூறுகிறது. இருப்பினும் சுயாதீன மதிப்பீடுகள் இந்த எண்ணிக்கை 20,000 முதல் 50,000 வரை இருக்கக் கூடும் என்கின்றன.
அத்துடன் ஹிஸ்புலாவிடம் 1.2 லட்சம் முதல் 2 லட்சம் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளன என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான, உத்தி மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் தெரிவித்துள்ளது. ஹிஸ்புலா உலகின் மிகவும் சக்திவாய்ந்த அரசு சாரா ராணுவங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. இது லெபனானின் தேசிய ராணுவத்தை விட மிகவும் வலிமையானதாகக் கருதப்படுகிறது.
லெபனானின் தேசிய அரசாங்கம் பலவீனமாக இருப்பதாலும் ஹிஸ்புலா பயனடைந்துள்ளது. 2022-ஆம் ஆண்டு முதல் லெபனானுக்கு அதிபர் இல்லை. அதிபர் யார் என்பதைத் தீர்மனிப்பதில் அரசியல் கட்சிகளுக்கிடையே உடன்படிக்கை ஏற்படவில்லை. ஹிஸ்புலா தனது சொந்தக் குறிக்கோளைச் செயல்படுத்துவதைத் தடுக்கும் அளவுக்கு லெபனான் அரசு பலமானதாக இல்லை.
1982-ஆம் ஆண்டு, லெபனான் உள்நாட்டுப் போரின் போது, லெபனானை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேலியப் படைகளை எதிர்க்க, ஷியா முஸ்லீம்களின் ஆயுதக் குழுவாக ஹிஸ்புலா அமைக்கப்பட்டது. இக்குழுவுக்கு, ஈரானின் இஸ்லாமிய குடியரசு பெருமளவில் ஆயுதம் மற்றும் நிதியுதவி வழங்கியுள்ளது. அரபு மொழியில் ஹிஸ்புலா என்பதன் பொருள் ‘கடவுளின் கட்சி’ என்பதாகும்.
1985-இல் ஹிஸ்புலா தனது இருப்பை முறையாக அறிவித்தது. அப்போது அக்குழு, ஈரானில் உள்ளதைப் போல லெபனானில் ஒரு இஸ்லாமிய அரசை நிறுவ விரும்புவதாக அறிவித்தது. தெற்கு லெபனான் மற்றும் பாலத்தீனப் பகுதிகளில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் அது உறுதியளித்தது. 2009-இல், ஹிஸ்புலா ஒரு புதிய கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டது. அதில் அது ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்குவதைக் குறிப்பிடவில்லை. இருப்பினும், இஸ்ரேலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அது தொடர்ந்தது.
லெபனானின் உள்நாட்டுப் போர் 1990-இல் முடிவடைந்தபோது, போரிட்ட அனைத்துப் பிரிவுகளும் தங்கள் ஆயுதக் குழுக்களை கலைத்தன. இருப்பினும், ஹிஸ்புலா கலைக்கப்படவில்லை. தெற்கில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராட வேண்டும் என்று அது கூறியது.
இஸ்ரேல் இறுதியாக 2000-ஆம் ஆண்டில் அப்பகுதியிலிருந்து தனது படைகளை திரும்பப்
பெற்றது. ஹிஸ்புலா அதை வெற்றி என்று கூறியது. 1992-இல், ஹிஸ்புலா நாடாளுமன்றத்திற்கு வேட்பாளர்களை நிறுத்த தொடங்கியது.
பெற்றது. ஹிஸ்புலா அதை வெற்றி என்று கூறியது. 1992-இல், ஹிஸ்புலா நாடாளுமன்றத்திற்கு வேட்பாளர்களை நிறுத்த தொடங்கியது.லெபனானில் ஹிஸ்புலா இப்போது பல நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அந்நாட்டின் அரசாங்கத்தில் ஹிஸ்புலா அமைச்சர்களும் உள்ளனர்.
லெபனானில் ஷியா சமூகங்கள் பெருமளவில் உள்ள பகுதிகளில் பள்ளிகள், சுகாதாரம், மற்றும் சமூக சேவைகள் போன்றவற்றையும் ஹிஸ்புலா வழங்குகிறது.
லெபனானில் உள்ள மற்ற கட்சிகளும் தங்கள் தொகுதிகளுக்கு இத்தகையச் சேவைகளை வழங்குகின்றன. ஆனால் அவற்றைவிட ஹிஸ்புலா மிகப்பரந்த வலையமைப்பைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
![]()