உலகம்

டிரம்பின் மிரட்டல் ; நட்பு நாடுகளுக்கு மட்டுமே ஹோர்முஸ் நீரிணை; ஈரான் பிடிவாதம்!

நட்பு நாடுகளுக்கு மட்டுமே ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அனைத்து கப்பல் போக்குவரத்துக்காக ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரானுக்கு காலக்கெடு விதித்தார்.

ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பதழ்தி நிலையங்கள், பாலங்களை அழிப்போம் எனவும் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கையை ஈரான் ஏளனம் செய்ததுடன் முட்டாள்தனமானது எனவும்கூறி நிராகரித்தது.

ட்ரம்பின் இறுதி எச்சரிக்கைக்கான கால அவகாசம் இன்று இரவுடன் முடிவடையவுள்ள நிலையில், போர்நிறுத்த முன்மொழிவை நிராகரிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

இந்த பதிலை பாகிஸ்தான் மூலம் ஈரான் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பில் எகிப்தில் உள்ள ஈரான் தூதரகத்தின் தலைவர் மொஜ்தபா பெர்டோசிபூர் கூறுகையில்,

“நாங்கள் வெறுமனே ஒரு போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம். மீண்டும் நாங்கள் தாக்கப்பட மாட்டோம் என்ற உத்தரவாதங்களுடன் மட்டுமே போர் முடிவுக்கு வருவதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்” என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *