போர்களுக்கான காரணங்கள்… ஏலையா க.முருகதாசன்


(பணத்தையும் அப்பணத்திற்கு ஈடான ஒரு பொருளையும் ஒன்றுக்கொன்று சமநிலை கொண்டது என்ற கோட்பாடு ஒரு மாயைக் கோட்பாடாகும்.)
உலக நாடுகளில் ஆங்காங்கே போர் நடக்கின்றது என்பதை எளிமையாகச் சொல்வதென்றால் ஆங்காங்கு சண்டை நடக்குது என்று சொல்வதோடு அந்தச் சண்டை ஏன் நடக்கின்றது என்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒவ்வொரு நாடும் தமது பொருளாதார வளங்களை காத்துக் கொள்ளும் நோக்கிலேயே அரசியiஈல நகர்த்தி வருகின்றன.அது சரியானது ஏனெனில் மக்களின் நிறைவான வாழ்வு பொருளாதார வளங்களிலேயே தங்கியிருக்கின்றது என்பதே உண்மை.
நாடுகள் ஒவ்வொன்றும் தமது நாட்டின் வளங்களுக்கேற்றவாறும்,அதன் பெறுபேறாக ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற விதத்திலும் கொள்கைகளை வகுத்து வைத்திருக்கின்றன.
இக் கொள்கைகளின்; வழியோடொத்த பல்வேறுகட்டமைப்புகளுக்கூடாக அந்தந்த நாட்டு மக்களின் சராசரி வாழ்க்கையில் அவர்களுக்கான உதவிகள் என்பது தொட்டு மற்றைய நாடுகளுடனான தொர்புகளும் அத்தொடர்பின் வழியாக பரஸ்பரம் ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு பலதரப்பட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றன.
உலகில் பெரும்பாலான நாடுகள் இப்போக்கினைக் மேற்கொண்ட போதும் விரல்வி;ட்டு எண்ணக்கூடிய சில நாடுகள் மற்றைய நாடுகளிடமிருந்து உதவிகளை பெற்றுக் கொள்ளாமல் தமது வளங்கள் வழியாக தமது நாட்டை நிர்வாகித்து வருகின்றன.
ஒரு நாட்டினுடைய முதல் தேவையே உணவுதான் இந்த உணவுக்கான அடிப்படை மூலம் விவசாயமே ஆரம்ப உலக மனிதர்கள் உணவின் தேவைக்காக உழைத்து மற்றவர்களில் தங்கியிருக்காது தம்மைத் தாமே காத்துக் கொண்டனர்.
படிப்படியாகப் பல்துறை வழியாக வளர்ந்த உலகம் தமது தேவைகளுக்காகவும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டவும் என ஒன்றுக்கொன்று போட்டித் தன்மைக்கூடாக இராணுவக் கட்டமைப்பை வலுப்பெறச் செய்தன.
பொருட்களை வாங்கவும் விற்கவும் என்பதற்காக ஒரு பரிவர்த்தனை ஊடகமாக பணம் என்ற ஒன்றை உலக நாடுகள் தமக்குத்தாமே அறிமுகப்படுத்திக் கொண்டன.
ஆனால் ஒரு பொருளுக்கு ஈடாகப் பணம் பரிமாற்றம் செய்வது ஒரு போலித்தன்மையான சமநிலைப்பாடேயாகும்.
பணத்தையும் அப்பணத்திற்கு ஈடான ஒரு பொருளையும் ஒன்றுக்கொன்று சமநிலை கொண்டது என்ற கோட்பாடு ஒரு மாயைக் கோட்பாடாகும்.
சமநிலையானது,ஈடானது என அப்படி ஏற்றுக் கொள்ளுங்கள் என மானிட சமூகத்தை நம்ப வைத்திருக்கின்றது உலகம்.
ஒரு பொய்யை உலக மக்கள் அனைவரும் தொடர்ச்சியாகச் சொன்னால் அது நாளடைவில் சொல்லப்பட்ட சம்பவமோ அல்லது விடயமோ உண்மைதான் என்பதாக நிலைத்து அது உண்மையேதான் என மற்றவர்களை நம்ப வைத்துவிடும்.
பொய்களை உண்மையாக்குதலும் ஒரு இராஜதந்திரப் போர்பொறி முறையாகும்.
ஓன்றின் பெறுமதிக்கேற்றவாறு பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது என்பது போலியானது.பொருளுக்கு ஏற்ற விலை என்பதும் போலியானது.உடலுக்கு அதன் ஆரோக்கியத்துக்கு உணவும் நீரும் மிக மிக இன்றியமையாதது என்பது இன்றியமையாததேதான்.அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துமேயில்லை.
சமன்படுத்தல் என்ற நம்பிக்கையை அல்லது பொருள் கொள்வோரைத் திருப்தியாக்குவது ஒரு போலித்தனமான சமன்பாடாகும்.ஆனால், தொடர்ச்சியான இசைவாக்கச் செயல்பாடால் மனிதகுலத்தில் அப்போலிச் செயல்பாடு நிலைத்துவிட்டது.
உலகம் பணம் என்ற பொருளை உருவாக்கி,பண்டமாற்று என்ற பரிமாற்ற நடைமுறையிலிருந்து விலகி உலகம் பணச் சிந்தனைக்குள் புகுந்துள்ளது.பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நிலை உலகெங்கும் வலுவடைந்துவிட்டது.
உலக நாடுகளில், சில நாடுகள் தாமே உலக நாடுகளின் தலைமைத்துவத்தை என்றும் வகிக்க வேண்டும், தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு மாயை உலகை தோற்றுவித்துள்ளன.அந்நாட்டுப் பணமே பெறுமதியானது என உலகை நம்ப வைத்துள்ளது.அதனை உண்மைப்படுத்த உலக நாடுகளில் அப்பணத்தால் பொருள்களை கொள்முதல் செய்யலாம் என்ற வணிக முறைமை ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக உலக நாடுகளின் சந்தைகளில் எந்தப் பொருளையும் டொலர்ப் பணததில்; வாங்க முடியம் என்ற ஒரு நிர்ப்பந்த நிலையை ஒரு இயல்பு நிலையாக நீட்சிபெற வைத்து டொலர்ப் பணந்தான் பெறுமதியானது என்ற வழமை நிரந்தரமான பணப் பெறுமதியாக தோற்றம் பெற்றுள்ளது.
ஒரு பணத்தின் பெறுமதியை எது தீர்மானிக்கின்றது என்பது, அப்பணத்தின் பெறுமதிக்காக அந்நாடுகள் வைத்திருக்கும் தங்கத்தின் பெறுமதி,தங்கச் சுரங்கங்களின் இருப்பு,இப்பொழுது நிலக்கீழ்எண்ணையும்; பணப் பெறுமதியின் ஒரு பகுதியாகக் கணிக்கப்படும் நிலைக்கு உருவாகினாலும்,தங்கத்தினைப் போல எண்ணையை நிரந்தரப் பெறுமதியானது என்பதற்கு அவ்வெண்ணை வளத்தை; பயன்படுத்திய பின்னரும் பயன்படுத்த முடியாத அது அழிந்து போகும் நிலை இருப்பதே காரணம்.
அதைத் தெளிவாகச் சொல்வதானால் எண்ணை எரிந்து கிடைக்கும் சக்திக்குப் பிறகு அந்த எண்ணை மீண்டும் பாவனைக்கில்லாது அழிந்து போகும் என்பதேயாகும்.
ஆனால் தங்கம் தங்கச் சுரங்கத்திலிருந்து எடுத்து அதை பாளமாக்கிப் பின்னர் அதனை நகைகளாக உருமாற்றிக் கொண்டாலும் அது நகைகளாக உருமாறியதே தவிர தங்கத்தின் இயல்பும் தனிம கனிம நிலையோ மூலக்கூறுகளோ மாற்றமடையாது.
இதனடிப்படையில் உலகில் பெருமளவு பாவனையில் பெறுமதிமிக்க பணமாக கருதப்படும் டொலர்ப்பணமும் ஈரோப் பணமும் பவுண்ட்ஸ் பணமும் அந்தந்த நாடுகள் வைத்திருக்கும் பணத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.
ஆனால் அவையும்கூட ஒரு போலித் தீர்மானமும் அதன் மீதான நம்பிக்கையும்,நம்ப வைத்துள்ள நம்பிக்கை இசைவாக்க மயக்கமுமாகும்.
அமெரிக்கா-ஈரான்-இஸ்ரேல் போரானது,ஈரானுக்கு எதிரான அமெரிக்க.இஸ்ரேல் போரல்ல,இப்போர் யூரோப் பணத்திற்கு எதிரான ஐரோப்பிய யூனியனைப் பிளவுபடுத்தும் போர் என்பது இப்போரின் அத்தியாவசியம் பற்றிச் சிந்திப்போருக்குத் தெட்டத் தெளிவாகவே தெரியும்.
ஏற்கனவே பல்வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தோரின் இருப்பிடமாக மாறிவிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு குறிப்பாக ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் அகதிகள் வருகை கட்டுக்கடங்காத பிரச்சினையாக இருந்துவரும் நிலையில் சிரியாவிலிருந்தும் உக்ரைனிலிருந்தும் அகதிகள் வந்து நிறைந்ததனால் ஐரோப்பிய நாடுகள் தடுமாறுகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தலைமை போலிருக்கின்ற ஜேர்மனியை குறிவைப்பதே அமெரிக்காவின் முழுக்கவனமாக இருக்கின்றது.
ஒரு புறம் ஜேர்மனியுடன்: நட்பு என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்கா திரைமறைவில் ஜேர்மனி,ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை பிரித்தெடுக்கும் திட்டத்திற்காக பல ஆண்டுகளாக ஜேர்மனியை சீர்குலைய வைப்பதற்காக பொறிக்கிடங்கொன்றைத் தோண்ட முயற்சி செய்து வருவதை சர்வதேச அரசியல் தெரிந்தவர்கள் நன்கறிவார்கள்.
அதன் தொடர்ச்சியான நடவடிக்கைதான் இன்று நடைபெறுகின்ற ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் போராகக் கணிப்பீடு செய்ய முடிகின்றது.

ஒரு போர் ஏன் நடைபெறுகின்றது என்பதற்கான காரணங்களை ஊகித்தறிவதிலும் அதற்கான திடமான உண்மை இதுதான் என தெரிந்த போதும் உலக நாடுகளின் பொருளாதார நிலைப்பாடுகளையும் அவற்றின் உள்ளீட்டுத் தன்மையையும்,ஒரு நாடு ஏதோ ஒரு காரணத்திற்காக இன்னொரு நாட்டிடம் அல்லது நாடுகளிடம் தங்கியிருத்தலை தெளிவாக உணர்ந்து உலகில் நோக்கர்கள் அல்லது அத்துறைசார் அறிஞர்கள் மிகத் தெளிவாகத் தெரிந்து உலகிற்கு சொன்ன போதும் அது அறிஞர்கள் மட்டத்தினரின் அறிதலோடு நின்றுவிடுவதுடன் அச்செய்தி உலகப் பொதுமக்கள் மத்தியில் ஒருவருக்கொருவர் உரையாடுவதற்கான பொழுதுபோக்காவும் மட்டுமே வடிவம் பெற்றுவிடுகின்றது.
ரஷ்ய-உக்ரைன் போர் வலுத்த போது இது மூன்றாவது உலகப: போராக வளர்ந்துவிடும் எனவும் பலராலும் கணிக்கப்பட்ட போது, உக்கிரமான போரொன்று அரபு நாடொன்றுக்கும் அமெரிக்காவுக்குமிடையில்தான் நடைபெறும் என்றும் அச்சு ஊடகங்கள் தொடங்கி மின்னியல் ஊடகங்கள் வரை செய்திக் கட்டுரைகளாக வெளிவந்தன.

வெளிப்பார்வைக்கு இது ஈரானுடான போராகத் தோற்றப்படினும் இது யூரோ பணத்தின் ஆதிக்கத்தைச் சீர்குலைப்பதற்கான போரென்பது தெட்டத் தெளிவாகத் தெரிவதுடன் மக்களின் அன்றாட வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட பொருள்கொள் போக்குவரத்துக்கான உலகுதழுவிய முக்கியமான கடல்வழியாக பொருள்களைக் கொண்டு செல்லுதல் தொடங்கி அவற்றைத் தரைவழியாக கொண்டு செல்லுதல் வரையான சக்தியான எரிபொருள் விலையேற்றத்தின் ஊடாக மக்களுக்கான பொருள்களின் விலையேற்றங்களை நாடுகள் தாங்கிக் கொள்ள முடியாத நிலைக்குக் கொண்டுவருவதே இப்போரின் நோக்கமாகும்.
ஐரோப்பிய நாடுகளில் அந்நாட்டவர்களல்லாத அகதிகளை புலம்பெயர்தல் மூலம் பரவலாக்குவது மட்டுமல்ல,நாடுகளை ஒன்றுக்கொன்று கசப்படையச் செய்து நாடுகளுக்கிடையில் ஒற்றுமைத் தொய்வினை ஏற்படுத்தி யூரோ பணத்தை ஒருங்கிணைந்த நாடுகளின் ஒரே பணமாக வைத்திருக்க வேண்டுமா என்பதனை ஐரோப்பிய ஒருங்கிணைவு நாடுகள் மறுபரிசீலணை செய்யும் நிலையை ஏற்படுத்துவதே இப்போராகும்.
![]()