உலகம்

மொசாட்டின் பிடியிலும் எப்ஸ்டீன் விவகாரத்திலும் திக்குமுக்காடிய ட்ரம்பின் சதி! கொந்தளிக்கும் ஈரான்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் போர் மீதான ஈர்ப்பு மற்றும் தவறான கொள்கைகள், உலகையே இரத்தக் களரியாக மாற்றி வருவதாக ஈரானிய இராணுவத்தின் உயர்மட்டப் பிரிவான சீல் ஆப் தி ப்ரோபெட்ஸ் (Seal of the Prophets) தலைமையகத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவிற்குள்ளேயே மில்லியன் கணக்கான மக்களை வீதிக்குக் கொண்டு வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ட்ரம்ப் சர்ச்சைக்குரிய ‘எப்ஸ்டீன்’ (Epstein case) வழக்கில் சிக்கியுள்ளதாகவும், அதிலிருந்து தப்பிக்கவும் அந்த நெருக்கடியைச் சமாளிக்கவுமே அவர் போரைத் தூண்டுவதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

ஆபத்தில் அமெரிக்கா..

இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் (Mossad) மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்தே ட்ரம்ப் செயல்படுவதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன்,  ட்ரம்பின் போர் அறிவிப்புகளால் அமெரிக்காவிற்குள் ஒருவிதமான அச்சம் நிலவுவதாக ஈரான் தெரிவிக்கிறது.

“அமெரிக்காவில் நடைபெற்று வரும் மில்லியன் கணக்கான மக்களின் போராட்டங்கள், ஒரு தெரியாத எதிர்காலத்தைப் பற்றிய ஆழமான கவலையையே பிரதிபலிக்கின்றன.

ட்ரம்பின் ஆலோசகர்கள் வழங்கும் தவறான ஆலோசனைகள் பிராந்தியத்தின் பாதுகாப்பை முற்றிலுமாகச் சீர்குலைத்துள்ளன” என ஈரானியப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *