இலங்கை

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை உறுப்பினருக்கு மூன்றாவது தடவை ரி.ஐ.டி. அழைப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் நிர்வாகக் குழு உறுப்பினரும், கிராஞ்சி வட்டாரத்தின் அமைப்பாளருமான திருமதி.தயாநந்தன் ஜெயச்சித்திரா கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் (ரி.ஐ.டி) மீண்டும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நாளை செவ்வாய்க்கிழமை (07) முற்பகல்- 10 மணியளவில் கொழும்பிலுள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் விசாரணைப் பிரிவில் அவரை முன்னிலையாகுமாறு பொலிஸாரால் வழங்கப்பட்ட அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திருமதி.தயாநந்தன் ஜெயச்சித்திரா குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவால் இம்முறை மூன்றாவது தடவையாக விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *