நிகழ்வுகள்

தமிழ்நாடு மயிலாடுதுறை தருமை ஆதீனம் – யாழ் வருகை

சைவசித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்தப்புலவர், பட்டப்படிப்புகளுக்கான ஆரம்ப விழாவை ஆரம்பித்து வைப்பதற்காக இந்தியாவின் திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் (5) பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

சைவ பரிபாலன சபையை மையமாகக் கொண்டு தர்மபுர ஆதின அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டப் படிப்புகளை ஆரம்பித்து வைப்பதற்கானது தொடர்பான ஊடக சந்திப்பு மாவிட்டபுரம் சிவபூமி திருக்குறள் வளாகம் அரண்மனையில் இடம்பெற்றது.

இதன்போது கலாநிதி ஆறு திருமுருகன், இலங்கை இந்து மத குரு பீடத்தின் தலைவர் சிவ ஸ்ரீ வைத்தியஸ்வர குருக்கள் மற்றும் நல்லை ஆதீனத்தினர் உள்ளட்ட சுவாமிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது திருமுறைகள் உள்ளடங்கிய நூல்களும் தமிழ், சிங்களம்ஆ கிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *