பிள்ளையானுக்கு ஏற்பட்ட ஆபத்து – பெரும் பதற்றத்தில் கம்மன்பில!

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் என முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்ற தலைப்பில் உதய கம்மன்பில நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில்,தாம் எழுதிய நூலை பிரசுரமாவதற்கு முன்னர் களவாடி, போலி தகவல்களை உள்ளடக்கி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெலஉறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் அதன் பிரதானி ஷானி அபேசேகர ஆகியோர் மீது தாம் இது குறித்து குற்றம் சுமத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பிள்ளையான் தேசிய வீரர் அவரை பாதுகாக்க நான் சட்டத்தரணியாக முன்னிலையாகுவேன்.
விடுதலைப்புலிகள் அமைப்பை அழிக்க இராணுவத்திற்கு தகவல் வழங்கி உளவாளியாக செயற்பட்டார். ஆகவே சிங்கள இனம் பிள்ளையானுக்கு நன்றி கடன் பட்டுள்ளது என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
![]()