இலங்கை

போரை உடன் நிறுத்த ஐ.நா வலியுறுத்தல்

போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும் அதேவேளை அனைத்துத் தரப்பினரும் விரோதப் போக்குகளைக் கைவிட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டெரெஸ் நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது, இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.

நாம் ஒரு பரந்த போரின் விளிம்பில் இருக்கிறோம், இது முழு மத்திய கிழக்கையும் விழுங்குவதுடன் உலகம் முழுவதும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் ஏற்கனவே தவித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஹோர்முஸ் நீரிணை முடக்கப்படும்போது, உலகின் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களால் சுவாசிக்க முடியாது என்றார்.

சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்று கோரிய அவர், அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் மதிக்கப்பட வேண்டும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், எனது செய்தி தெளிவானது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு நான் கூறுவது என்னவென்றால், அளவிடமுடியாத மனித துயரங்களை விளைவிக்கும் மற்றும் ஏற்கனவே அழிவுகரமான பொருளாதார விளைவுகளைத் தூண்டியுள்ள இந்தப் போரை நிறுத்த வேண்டிய தருணம் இது.

ஈரானுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள் என்பதாகும் எனத் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *