இலங்கை

கம்மன்பிலவின் சூழ்ச்சி! பேராயர் அமைதிகாப்பது சரியில்லை; உடனே கைது செய்யாவிட்டால் பெரிய ஆபத்து

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் என முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி வேறு ஒருவர் என காண்பிக்க சிலர் முயற்சித்தாலும் இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் என்பது நிரூபணமாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த புத்தக வெளியிட்டு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறான விடயங்கள் மூலம் மக்களை திசை திருப்ப வேண்டாம் என்று பத்ரமுல்ல சீலரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவ்வாறு திசை திருப்ப முயற்சிப்பவர்களை கைது செய்யுமாறு ஜனாதிபதிக்கு கூறுங்கள் என்று பேராயர் மல்கம் ரஞ்சித்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *