உலகம்

ஈரான் மீதான போர்; ட்ரம்ப்பிடம் பாப்பரசர் லியோ வேண்டுகோள்

ஈரான் மீதான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சரியான வழியை கண்டறியுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு பாப்பரசர் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த முதல் பாப்பரசரான லியோ, ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், “ஜனாதிபதி ட்ரம்ப் போரை நிறுத்த விரும்புவதாகக் கேள்விப்பட்டேன். வன்முறையைக் குறைப்பதற்கான வழியை அவர் கண்டறிவார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரையில், போரை ஆரம்பிப்பவர்களின் கைகள் “இரத்தத்தால் படிந்துள்ளன” எனவும், அவர்களின் பிரார்த்தனைகளை கடவுள் ஏற்பதில்லை எனவும் பாப்பரசர் மிகவும் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் 05 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த வன்முறைகள் முடிவுக்கு வர வேண்டும் என அவர் தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

அப்பாவிச் சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அமைதிக்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களுடன் ஆரம்பித்த போர், தற்போது ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில் உலக நாடுகளில் பெரும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *