உலகம்

ரஷியா–உக்ரைன் போரில் புதிய அத்தியாவசியம் ; டொனெட்ஸ்க் இலக்கை நோக்கி ரஷியா புதிய அழுத்தம்

கிழக்கு உக்ரைனின் முக்கியத் தொழில் மண்டலமான லுகான்ஸ்க் பிராந்தியத்தைத் தங்கள் படைகள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக ரஷியா புதன்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது.

கடந்த 2022-இல், உக்ரைன் மீது போா் தொடங்கிய காலத்திலிருந்தே இப்பிராந்தியத்தின் பெரும்பான்மை நிலப்பரப்பு ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில், எஞ்சியிருந்த சிறு பகுதிகளையும் தற்போது தங்கள் ராணுவம் மீட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

லுகான்ஸ்க், டொனெட்ஸ்க் ஆகிய இரண்டு பிராந்தியங்களை உள்ளடக்கிய டான்பாஸ் பகுதியை முழுமையாகக் கைப்பற்றுவதை ரஷியா தனது முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது.

லுகான்ஸ்க் மக்கள் குடியரசு தற்போது முழுமையாக விடுவிக்கப்பட்டுவிட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இது தவிர, ஸபோரிஷியா பகுதியில் உள்ள சில கிராமங்களையும் ரஷிய படைகள் தங்கள் வசப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் இந்த உரிமை கோரல் குறித்து உக்ரைன் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரபூா்வமான பதிலும் வரவில்லை.

இதனிடையே, போரின் தீவிரத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனில், டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து அந்நாட்டுப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என ரஷியா மீண்டும் வலியுறுத்தியது. எனினும், ரஷியாவின் இக்கோரிக்கையை உக்ரைன் தொடா்ந்து நிராகரித்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *