உலகம்

தெஹ்ரானிலுள்ள முன்னாள் அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து புதன்கிழமை முன்னெடுத்த வான்வழித் தாக்குதல்களில், தெஹ்ரானில் அமைந்துள்ள முன்னாள் அமெரிக்கத் தூதரகக் கட்டடம் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தாக்குதல்களின் போது தூதரக வளாகத்தின் வெளிப்புறச் சுவர்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக ஏ.எஃப்.பி (AFP) செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி பிபிசி செய்திய வெளியிட்டுள்ளது.

1979ஆம் ஆண்டு ஈரான் புரட்சியின் போது இந்தத் தூதரகம் முற்றுகையிடப்பட்டு, 50க்கும் மேற்பட்டோர் 444 நாட்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வொஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகத் தூதரக உறவுகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஒரு காலத்தில் அமெரிக்கத் தூதரகமாகச் செயற்பட்ட இந்தக் கட்டடம், தற்போது ஈரானில் ஒரு அருங்காட்சியகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தற்போது நடைபெற்று வரும் போரின் ஒரு பகுதியாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *