உலகம்

லெபனானில் பலி எண்ணிக்கை 1300 ஐ கடந்தது

லெபனானில் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் ஆரம்பமானதில் இருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,318 ஆக உயர்ந்துள்ளது.

அந்த நாட்டின் சுகாதார அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி , லெபனானின் அரச ஊடகம் இந்த தகவலை வௌியிட்டுள்ளது.

அத்துடன் இந்த போரில் 3,935 பேர் காயமடைந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 28 முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பின் நட்பு நாடான ஈரான் மீது தாக்குதல் நடத்தின.

இதனைத் தொடர்ந்து, மார்ச் 2 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா இந்த பிராந்திய போரில் இணைந்தது.

அதன்பிறகு, இஸ்ரேல் தெற்கு லெபனானுக்குள் தனது தரைப்படை வீரர்களை அனுப்பியதுடன், நாடு முழுவதும் பரவலான தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *