முச்சந்தி

டிரம்ப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்: அமெரிக்க வரலாற்றில் பாரிய மக்கள் எழுச்சி….. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(டிரம்பின் கொள்கைகள், குடியேற்றக் கட்டுப்பாடுகள் மற்றும் சர்ச்சை திட்டங்களுக்கு எதிராக ‘அரசர்கள் வேண்டாம்’ (No Kings) என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இலட்சக்கணக்கான அமெரிக்க மக்கள் பல்வேறு இடங்களில் திரண்டு டிரம்ப் மீதான கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்)

ஈரான் போர், அதனால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளால் அமெரிக்க மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் வெளிப்பாடாக ‘அரசர்கள் வேண்டாம்’ (No Kings) என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இலட்சக்கணக்கான அமெரிக்க மக்கள் பல்வேறு இடங்களில் திரண்டு டிரம்ப் மீதான கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

டிரம்ப்புக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் எதிர்ப்பு, அமெரிக்காவில் மாபெரும் போராட்டமாக மாறியது. டிரம்ப்புக்கு எதிராக ‘அரசர்கள் வேண்டாம்’ என்ற பேரணிகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் அதிர்ந்து போயுள்ளனர்.
எமக்கு அரசர்கள் வேண்டாம் என்ற போராட்டத்துல் 90 இலட்சம் பேர் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். அமெரிக்காவின் 3000 நகரங்களில் கடந்த சனிக்கிழமை மார்ச் 28இல் வீதிகளில் மக்கள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிரம்பினால் தமது வரிப்பணம் ஈரானிலும், பாலஸ்தீனிலும், மத்திய கிழக்கிலும் நாசமாகுவதை
அமெரிக்கர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை எடுத்துக் காட்டும் வகையில், அமெரிக்கா எங்கிலும் டிரம்ப்புக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற்றது. அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இது என்று கூறப்படுகிறது.

இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளது என்று கூறியுள்ளனர். இதுவே டிரம்ப் நிர்வாகத்தின் மீது மிகுந்த அதிருப்தி அடைந்த மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்க நாட்டில் ஜனநாயகம் வேண்டுமென்றால், போராட்டத்தில் ஈடுபட்டு அதைக் காப்பாற்ற வேண்டும் என்று மக்கள் தமது மனக் குமுறல்களைக் கொட்டியுள்ளனர்.

ஈரான், ஹார்மூஸ் நீரிணையை தங்கள் கட்டுபாட்டில் எடுத்து, கப்பல் போக்குவரத்தை முடக்கியது. இதனால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு உலக அளவில் ஏரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஈரான் தற்போது மறைமுக பேச்சுவார்த்தை நடத்துவதகாவும் அந்த நாட்டின் மீதான தாக்குதல் ஏப்ரல் 6 வரை நிறுத்திவைக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்தார். ஆனால் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று ஈரான் கூறி வருகிறது. ஈரான் மீது எடுத்த நடவடிக்கைக்கு டிரம்பிற்கு அவரது சொந்த நாட்டிற்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

ஏற்கனவே டிரம்ப், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் மீது பரஸ்பர வரி விதித்தார். இந்த வரி விதிப்பால் அமெரிக்காவில் பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்ந்தது விலை வாசி உயர்ந்தது. இது அமெரிக்கர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், டிரம்பின் கொள்கைகள் மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

நீங்கள் ஒன்றும் மன்னர் இல்லை குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்க எங்கும் இந்த போராட்டம் நடைபெற்று உள்ளது. செயின்ட் பாலில் உள்ள மினசோட்டா கேபிடல் புல்வெளியிலும் அதைச் சுற்றியுள்ள தெருக்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்துக்குத் துணைநின்றனர். அவர்களில் பலர், வரலாற்று ரீதியாக அமெரிக்கக் கொடிகளைத் தலைகீழாகப் பிடித்திருந்தனர். கிட்டத்தட்ட 85 லட்சம் மக்கள் வசிக்கும் நியூயார்க் நகரத்திலிருந்தும் பலர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் வாஷிங்டனில், நூற்றுக்கணக்கானோர் “கிரீடத்தைக் கீழே போடு கோமாளியே” மற்றும் “ஆட்சி மாற்றம் வீட்டிலிருந்தே தொடங்குகிறது” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி, பேரணியாகச் சென்றனர். அத்துடன் கேன்சஸ் மாகாணத்தின் டோபெகா நகரில், போராட்டக்காரர்கள் காற்றடைக்கப்பட்ட தவளை உடையையும், டிரம்பின் குழந்தை வடிவத்தையும் அணிந்திருந்தனர்.

எமக்கு அரசர்கள் வேண்டாம் – No Kings:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானை ஒழித்துக் கட்டும் முனைப்பில், அதற்கு எதிராக கடுமையான போர் யுக்திகளைக் கையாண்டு வருகின்றார். இந்த சூழலில் அவருக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இது டிரம்ப் அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

டிரம்பின் கொள்கைகள், குடியேற்றக் கட்டுப்பாடுகள் மற்றும் சர்ச்சை திட்டங்களுக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர். ‘அரசர் வேண்டாம்’ (No Kings) என்கிற பெயரில் இந்த பேரணி நடைபெற்றது. அரசர்கள் வேண்டாம் போராட்டங்களின் முதல் இரண்டு கட்டங்களில் கடந்த காலங்களில் ஜூன் மாதத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமானோரும், அக்டோபர் மாதத்தில் 7 மில்லியனுக்கும் அதிகமானோரும் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

எமக்கு அரசர்கள் வேண்டாம்” (No Kings) எனும் தொனிப்பொருளில், அமெரிக்க வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய மக்கள் எழுச்சி நிகழ்ந்துள்ளது. ஒன்பது மில்லியன் மக்கள் பங்கேற்றுள்ள இந்தப் போராட்ட அலை, ஜனநாயகக் கட்சியின் கோட்டைகளுடன் மட்டும் நின்றுவிடாது, வரலாற்று ரீதியாகக் குடியரசுக் கட்சியின் செல்வாக்குமிக்க நகரங்களுக்கும் அதிவேகமாகப் பரவியது.

வாஷிங்டன் டி.சி, நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ் போன்ற பிரதான நகரங்களில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள், தற்போதைய ஆட்சியாளர்களின் செயற்பாடுகளுக்கு எதிராகத் தமது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

ஈரானுடனான போர்ச் சூழலும், அமெரிக்க நாட்டினுள் அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடியுமே இந்நிலைக்கு முக்கிய காரணங்கள் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனாலும் சில பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, குடியரசுக் கட்சியினரே தலைமைத்துவத்தின் முடிவுகளை விமர்சித்து இந்தப் போராட்டங்களில் இணைந்து கொள்வது ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்கு விடுக்கப்பட்ட பலமான சவாலாக மாறியுள்ளது.

அமெரிக்கா உள்நாட்டு அரசியல் குழப்பம்:

2026 ஆம் ஆண்டில் நிலவும் இந்த நெருக்கடியான சூழலால் அமெரிக்கா உள்நாட்டு ரீதியாகச் சீர்குலைவது, ஒட்டுமொத்த உலக அரசியலிலும் தீர்க்கமான தாக்கத்தைச் செலுத்துமென எதிர்பார்க்கப் படுகின்றது.

அரசர் வேண்டாம் (No Kings) பேரணி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-க்கு எதிராக அந்நாடு முழுவதும் போராட்டம் வெடித்திருக்கின்றது.

வாஷிங்டனில் நடைபெற்ற ‘நோ கிங்ஸ்’ போராட்டத்தின் போது, ​​லிங்கன் நினைவிடத்தின் முன்பாகப் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.

டொனால்ட் டிரம்ப் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றார். அதிபராக அவர் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். இந்தியாவிற்கு எதிராக வரிகளை உயர்த்தியது, வெனிசுலா அதிபரை அதிரடியாகக் கைது செய்தது மற்றும் இப்போதைய ஈரான் மீதான போர் உள்ளிட்டவை அவர் மேற்கொண்ட அதிரடி செயல்பாடுகள் ஆகும்.

இதேபோல், குடியேற்றம் விஷயத்திலும் மிகக் கடுமையானக் கட்டுப்பாடுகளை அவர் கொண்டு வந்திருக்கின்றார். இதற்கு எதிராகவே தற்போது மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியிருக்கின்றனர். வாஷிங்டன் டிசி, நியூயார்க், லாஸ் எஞ்சல்ஸ், சிகாகோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெருந்திரளாக கலந்துக் கொண்ட மக்கள் டிரம்ப்-க்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

பெருந்திரளாக திரண்ட போராட்டக்காரர்கள் நகரங்களில் இருந்து மட்டுமின்றி அந்நாட்டின் கிராமப்புறங்களிலும் போராட்டம் நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டுள்ளது.

இதேபோல், டிரம்பின் கிரீன்லாந்தைக் கைப்பற்றும் திட்டத்திற்கு எதிராகவும் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி சில பிரபலங்களும் கலந்துக் கொண்டனர். அந்த வகையில், ஆஸ்கர் விருது பெற்ற ராபர்ட் டி நிரோ, நியூயார்க் நகரில் நடைபெற்ற பேரணியில் கலந்துக் கொண்டார்.

போராட்டத்தில் டிரம்புக்கு எதிரான கோஷங்களுடன் சேர்த்து அவருக்கு எதிராக பாடலைப் பாடியும் போராட்டக்காரர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் எழுதிய ‘ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் மினியாபோலிஸ்’ (Streets of Minneapolis) பாடலை பாடி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது, ரெனி குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி என்ற இருவரை, அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் கூட்டாட்சிச் சட்ட அமலாக்க அதிகாரிகள் (U.S. Immigration and Customs Enforcement) சுட்டுக் கொன்றதற்கு எதிராக எழுதப்பட்ட பாடலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *