உலகம்

வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு மருத்துவ சங்கத்திற்கு பிரதமர் வலியுறுத்தல்- பிரித்தானிய சுகாதாரம் முடங்கும் அபாயம்

இங்கிலாந்தில் முன்னெடுக்கப்படவுள்ள 6 நாள் தொடர் வேலைநிறுத்தத்தைக் கைவிடுமாறு பிரித்தானிய மருத்துவ சங்கத்திற்கு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 48 மணிநேரக் கெடு விதித்துள்ளார்.

அரசாங்கம் முன்வைத்துள்ள 3.5 சதவீத ஊதிய உயர்வு மற்றும் சலுகைகளை நிராகரித்து, மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ள தொழிற்சங்கத்தின் முடிவு ‘பொறுப்பற்றது’ என பிரதமர் விமர்சித்துள்ளார்.

எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் போராட்டத்தைக் கைவிடத் தவறினால், மருத்துவர்களுக்கான 1,000 மேலதிக பயிற்சி இடங்கள் ரத்து செய்யப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

ஈரான் மீதான போர்ச் சூழலால் பணவீக்கம் அதிகரிக்கும் என்பதால், தற்போது வழங்கப்படும் ஊதிய உயர்வு போதுமானதல்ல எனத் தெரிவித்துள்ள மருத்துவச் சங்கம், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் இந்த 6 நாள் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இதனால் தேசிய சுகாதார சேவையின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *