இலங்கை

மாகாண சபைத் தேர்தல் எப்போது?; 7 ஆம் திகதி பாராளுமன்றில் சந்திப்பு

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டத் தடைகள் தொடர்பில் ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு பிரதானிகள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் எதிர்வரும் 7ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் உள்ள சட்டத் தடைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவினாலேயே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று எதிர்வரும் 7ம் ஆம் திகதி பாராளுமன்றம் செல்வார்கள் என்று ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் உள்ள தடைகள் தொடர்பில் ஆராய்ந்த பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் அண்மையில் விசேட தெரிவுக்குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு அண்மையில் கூடிய போது, அதில் பெரும்பான்மையானவர்கள் பழைய விகிதாசார முறையில் தேர்தலை நடத்தி, சட்டத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் பின்னர் ஆராய்ந்த சீர்செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *