தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று போராட்டம்

யாழ் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்குமாறு வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொது மக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமையும் (31), பெளர்ணமி நாளான நாளை புதன்கிழமையும் (1) தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் தொடக்கம் மாலை 6 மணி வரையும், பெளர்ணமி நாளான நாளை புதன்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையும் போராட்டம் முன்னெடுக்கப்படும். குறித்த போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு ஆதாராவு வழங்குமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
![]()