உலகம்

டிரம்ப் செய்தது பைத்தியக்காரத்தனம்; நாமே உருவாக்கிய ஒரு பிரச்சினை இது!; அமெரிக்க செனட்டர் கடும் விமர்சனம்

டிரம்ப் செய்தது முழுக்க முழுக்க பைத்தியக்காரத்தனம் என அமெரிக்க செனட்டர் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச்சூழல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு ஈரான் 2 பில்லியன் டாலர் கட்டணம் விதிக்க தொடங்கியுள்ளது. ஈரானின் இந்த அதிரடி முடிவை அமெரிக்க செனட்டர் கிறிஸ் மர்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.

போர் தொடங்குவதற்கு முன்பு இந்த வழித்தடம் தடையின்றி திறந்திருந்தது நாமே உருவாக்கிய ஒரு பிரச்சினைக்கு இப்போது தீர்வு தேடுவது பைத்தியக்காரத்தனம் என்று அவர் சாடியுள்ளார்.

இந்த போரைத் தொடர அமெரிக்கா நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2 பில்லியன் டாலர்களை செலவிடுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

இதற்கிடையில், ஈரானின் எரிசக்தி ஆலைகளை தகர்ப்பேன் என்று மிரட்டல் விடுத்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பேச்சுவார்த்தை சுமுகமாக நடப்பதாக கூறி, தனது காலக்கெடுவை ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார்.

ஆனால், ஈரான் தரப்போ எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என மறுத்துள்ளதுடன், ஹார்முஸ் ஜலசந்தி மீதான தனது இறையாண்மையை அங்கீகரிக்க கோரி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகவே நடப்பதால், உலக பொருளாதாரத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *