இலங்கை

செம்மணிப் புதைகுழி விரைவில் அகழ்வு; ஏப் 7 இல் திகதி தீர்மானிக்கப்படும்  

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பகுதியில் நீர் வற்றி காய்ந்து செல்லும் நிலையில் அகழ்வு பணிகளை ஆரம்பிப்பதற்கான திகதி தொடர்பாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதியன்று நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதி நடைபெறும் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு வெள்ளிக்கிழமை விஜயம் செய்து பார்வையிட்ட யாழ்ப்பாணம் நீதிவான் அது தொடர்பான கட்டளையை பிறப்பித்தார்.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை அண்ணளவாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதற்கான ஏது நிலைகளை ஆராய்வதற்காகவும் குறித்த பகுதியில் நீர் தேங்கி இருந்தால் அதனை அகற்றுவதற்கும் திட்டமிட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதியை பார்வையிட்டனர்.

அந்த நிலையில் அகழ்வு நடைபெறும் குறித்த பகுதியில் நீர் வற்றி காய்ந்து கொண்டு செல்கின்ற நிலைமை அவதானிக்கப்பட்டது.

அகழ்வு பணிக்கான திகதியை தீர்மானிப்பதற்கு எதிர்வரும் 8ம் திகதி புதன்கிழமை என முன்னர் தீர்மானிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் அரச விடுமுறை நாள் என்பதால் 7ம் திகதியன்று குறித்த வழக்கை எடுத்து அகழ்வு திகதி தொடர்பாக தீர்மானிக்கப்படவுள்ளது.

குறித்த பகுதியில் அகழ்வு பகுதியில் முன்னெடுக்கும் வகையில் துப்பரவு பணிகளையும் தொடர்ச்சியாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *