உலகம்

ஈரானின் குடியிருப்பு பகுதிக்குள் நடத்தப்பட்ட தாக்குதல்; பலர் பலி

ஈரானிய நகரமான கோமில் நடத்தப்பட்ட தாக்குதலில் பதினெட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று கால பர்திசான் பகுதியில் இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஆறு பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், பின்னர் அந்த எண்ணிக்கை புதுப்பிக்கப்பட்டது.

தகவல்களின்படி 10 பேர் காயமடைந்துள்ளனர்.

குடியிருப்புப் பகுதி என விவரிக்கப்பட்ட அந்த இடத்திற்கு மீட்புப் பணியாளர்கள் சென்றதாக ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *