சலேவின் கைது தேசத்துரோகச் செயல்!; கொந்தளிக்கும் சரத் வீரசேகர

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சல்லேவின் கைது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை முறியடிக்க அயராது உழைத்த சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது ஒரு தேசத்துரோகச் செயல் என்றும் வீரசேகர கூறியுள்ளார்.
அத்தோடு, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும், ஏனைய விசாரணை அறிக்கைகளிலும் சலேவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி சுரேஷ் சலே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()