உலகம்

சுமார் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து ஆற்றில் வீழ்ந்து விபத்து; 16 பேர் பலி – பங்களாதேஷை உலுக்கிய துயரம்

பங்களாதேஷின் ராஜ்பாரி பகுதியில் உள்ள தௌலதியா முனையத்தில் பேருந்து ஒன்று பத்மா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (25) நள்ளிரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாரந்தூக்கியின் உதவியுடன் பேருந்து கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், பேருந்துக்குள் இருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஆற்றில் இருந்து மேலும் இரண்டு பெண்களின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பங்களாதேஷின் தலைநகர் டாக்கா நோக்கிப் பயணித்த இந்தப் பேருந்தில் சிறுவர்கள் உட்பட சுமார் 40 பயணிகள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மேலும் பலரைக் காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *