உலகம்

ஈரான் போரினால் டொனால்ட் ட்ரம்பிற்கு நேர்ந்த சம்பவம்

டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபரானதும் பல அதிரடியான காரியங்களில் செய்து வருகிறார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என சொல்லி அந்நாட்டின் மீது போரை துவங்கினார். அமெரிக்காவோடு, இஸ்ரேலும் சேர்ந்து ஈரானை தாக்கியது. அதில், ஈரானின் உச்ச தலைவர் கமேனி அவரின் குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.

ஒருபக்கம் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது.இதன் காரணமாக உலகெங்கும் கச்சா எண்ணெய் செல்வது தடைபட்டிருக்கிறது.

ஏனெனில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல்களின் வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் அரசை மூடிவிட்டது. எனவே, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது.

சமையல் கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் பல நாடுகளில் உணவகங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த போர் முடிவுக்கு வரவேண்டும் என்பது உலகம் முழுவதும் உள்ள மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஒருபக்கம், இந்த போர் காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு கடுமையான சரிவை சந்தித்திருக்கிறது. மேலும், உலகமெங்கும் பங்கு சந்தையில் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *