துருக்கியில் கோர விபத்து; யாழின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் நடந்த டாக்ஸி விபத்தில் யாழ்.மாவட்டத்தின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
தனது தாயாரின் 60 ஆவது பிறந்த நாளை மகன் துருக்கியில் கொண்டாடிய பின் சுவிற்சர்லாந்துக்குத் திரும்ப வானூர்தி நிலையத்துக்குப் பயணம் செய்து கொண்டிருந்த போது டாக்ஸி விபத்தில் சிக்கியுள்ளது. குறித்த விபத்தில் டாக்ஸி கடும் சேதங்களுக்குள்ளானதுடன் வாகனத்தில் பயணித்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த யாழ் நவாலிப் பகுதியைச் சேர்ந்த திருமதி.ஜெயநந்தினி கணேசலிங்கம் (வயது-60), அவரது மகன் கணேசலிங்கம் விபூசன் (வயது-28) மற்றும் ஏழாலையைச் சேர்ந்த திருமதி.சுகந்தி சிவாஸ்கரன் (வயது-47) ஆகியோரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களாவர்.
இந்த விபத்து தொடர்பில் அந் நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
![]()