உலகம்

அமெரிக்கா– ஈரான் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராகிறது

பாகிஸ்தான் தனது வெளிவிவகார அமைச்சகத்தின் மூலம், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, அமெரிக்கா–ஈரான் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என டிரம்ப் கூறியதையடுத்து வெளியாகியுள்ளது.

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என தெளிவாக ஈரானினால ்மறுக்கப்பட்டுள்ளது டிரம்பின் கூற்றுக்கு நேரடி முரண்பாடான நிலைப்பாட்டை ஈரான் வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள், வாஷிங்டன் மற்றும் டெஹ்ரான் இடையே தகவல் பரிமாற்றத்தில் இடைத்தரகர்களாக செயல்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் இராணுவத் தலைவர், ஞாயிற்றுக்கிழமை டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார் அதற்கு அடுத்த நாள், பிரதமர் சிபாஷ் சாரீப், ஈரான் அதிபர் மசாவுட் பெசாக்கியானுடன் தொடர்புகொண்டுள்ளார்.

தொடர்ந்து, வெளிவிவகார அமைச்சர் இசாக் தார், ஈரான் மற்றும் துருக்கி அமைச்சர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் ஈரான் – அமெரிக்க சமாதான முனைப்புக்களில் பாகிஸ்தான் பங்கேற்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *