உலகம்

காலக்கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது ; ட்ரம்புக்கு ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் ஒரு மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் செல்வதற்கு ஈரான் தடைபோட்டு வருவதால் உலகம் முழுவதும் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈரான் உடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு, ஆக்கப்பூர்வமாக சென்று கொண்டிருக்கிறது ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும்.

இதற்காக 5 நாட்கள் ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு காலக்கெடு நிர்ணயித்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவை காப்பாற்றுவதற்கான காலக்கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது என ட்ரம்புக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஈரானின் புதிய ராணுவ ஆலோசகர் மோஹ்சென் ரெசாயி கூறுகையில் “அமெரிக்காவை பாதுகாப்பதற்கான கலக்கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது.

உங்களை முடக்கி, வளைகுடாவில் மூழ்கடிப்போம். இதில் இருந்து அமெரிக்காவை மீட்பதற்கு அதிக நேரம் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *