உலகம்

மத்திய கிழக்கில் பதற்றம் – குர்திஷ் படைகள் மீதான தாக்குதலில் அறுவர் உயிரிழப்பு

ஈராக்கின் பெஷ்மெர்கா (Peshmerga) படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈராக்கின் இராணுவத்தைச் சேர்த்த அறுவர் உயிரிழந்துள்ளனர்.

குர்திஷ் பிராந்தியத்தின் ஆயுதப் படைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்கள் பெஷ்மெர்கா (Peshmerga) படைகள் மீதான தாக்குதலுக்கு ஈரானே காரணம் என ஈராக்கின் தன்னாட்சி பெற்ற குர்திஷ் பிராந்தியம் குற்றம் சுமத்தியுள்ளது.

வெவ்வேறான இரு தாக்குதல்களில், ஆறு ஈரானிய பலிஸ்டிக் (ballistic) ஏவுகணைகள் இலக்குவைத்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பின்னர் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிராந்திய பாதுகாப்புப் படைகள் மீது நடத்தப்பட்ட உயிரிழப்பை ஏற்படுத்திய தாக்குதல் இதுவென்றும் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *