பலதும் பத்தும்

சுட்டெரிக்கும் வெயிலில் உடம்பை கூலாக வைக்க வேண்டுமா?

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் உடம்பை குளிர்ச்சியாக வைக்கும் உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

கோடை காலம் தொடங்கிவிட்டாலே, உடம்பில் நீர்ச்சத்து குறைய ஆரம்பித்துவிடும். இதனால் உடல் சோர்வாகவும், சூடாகவும் இருக்கும்.

இத்தருணத்தில் உடம்பை நீரோட்டமாக வைத்திருக்க சில இயற்கையான பானங்களை பருகுவது மிகவும் முக்கியம் ஆகும்.

 

கோடை காலத்தில் வீட்டிற்குள்ளும், வெளியிலும் வெப்பம் அதிகமாக இருப்பதால் உடம்பினை குளிர்ச்சியாக வைக்க என்னென்ன உணவினை பருகலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

 

எடுத்துக் கொள்ள வேண்டியது என்ன?

 

புதினா கலந்த தண்ணீரை பருகினால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். மேலும் இவை செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வயிறு உப்புசத்தையும் தடுக்கின்றது.

நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழமான தர்பூசணியை வெயில் காலத்தில் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியாக வைக்க முடியும். மேலும் இவை உடலில் நீர் வறட்சி ஏற்படுவதையும் தடுக்கின்றது.

சுட்டெரிக்கும் வெயிலில் உடம்பை கூலாக வைக்க வேண்டுமா? கட்டாயம் இதை எடுத்துக்கோங்க | Best Foods To Keep Your Body Cool During Summer

பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் கே போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படும் வெள்ளரிக்காய் கோடை காலத்திற்கு சிறந்ததாக காணப்படுகின்றது. அடிக்கடி வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியாக இருக்குமாம்.

 

சுட்டெரிக்கும் வெயிலில் உடம்பை கூலாக வைக்க வேண்டுமா? கட்டாயம் இதை எடுத்துக்கோங்க | Best Foods To Keep Your Body Cool During Summer

 

தயிர் கோடை காலத்திற்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று கூறப்படுகின்றது. தயிரில் உடம்பிற்கு நன்மை செய்யும் புரோபயாடிக்ஸ் இருப்பதால், இவை குடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தி, செரிமானத்தையும் அளிக்கின்றது. உடலுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கின்றது.

 

 

சுட்டெரிக்கும் வெயிலில் உடம்பை கூலாக வைக்க வேண்டுமா? கட்டாயம் இதை எடுத்துக்கோங்க | Best Foods To Keep Your Body Cool During Summer

வெயில் காலத்தில் இளநீர் சிறந்த பானமாக பார்க்கப்படுகின்றது. பொட்டாசியம், மக்னீசியம், சோடியம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றது. உடம்பை எப்பொழுதும் நீர்ச்சத்துடன் வைத்திருப்பது உதவுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *