உலகம்

அமெரிக்காவால் முடங்கிய மின் கட்டமைப்பு ; கியூபாவில் ஒரு கோடி மக்கள் இருளில் தவிப்பு!

கியூபாவின் தேசிய மின் கட்டமைப்பான ஹவானா மின்கட்டமைப்பு மீண்டும் பாரியளவில் செயலிழந்துள்ளதை அடுத்து, சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மின்சாரமின்றி முடங்கியுள்ளன.

கியூபாவின் மின்சாரக் கட்டமைப்பானது கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் இரண்டாவது முறையாக முழுமையாகச் செயலிழந்துள்ளது. இதனால் நாடு தழுவிய ரீதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரம் குறித்து கியூபாவின் எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில், மின்சார விநியோகத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் பணிகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மருத்துவமனைகள் மற்றும் நீர் வழங்கல் கட்டமைப்புக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மின்சாரத்தை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றது.

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக, மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதில் கியூபா பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடே மின் கட்டமைப்பு அடிக்கடி செயலிழப்பதற்குக் பிரதான காரணமாக அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *