உலகம்

போர் முடிவுக்கு வருகின்றதா? ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைக்க டிரம்ப் உத்தரவு

போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா ‘மிகவும் பயனுள்ள’ பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக, மத்திய கிழக்கில் நிலவும் பகைமைகளுக்கு ஒரு முழுமையான தீர்வு காண்பது தொடர்பாக ஈரானுடன் தனது நிர்வாகம் ஆக்கப்பூர்வமான உரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு போர் அமைச்சகத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த வாரம் முழுவதும் தொடரவிருக்கும் ஆக்கப்பூர்வமான இந்த உரையாடல்களின் போக்கு மற்றும் தொனியின் அடிப்படையில் பேச்சு வார்த்தை வெற்றிபெறும் என தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் டிரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *