பலதும் பத்தும்

நீரிழிவு நோயாளிகளே! சிறுநீரகத்தினை ஆரோக்கியம் வைத்துக் கொள்ளனுமா?

நீரிழிவு நோயாளிகள் சிறுநீரகத்தினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சிறுநீரகம்

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் உறுப்புகளில் ஒன்று தான் சிறுநீரகம். ரத்தத்தினை சுத்திகரிக்கும் வேலையினை செய்யும் சிறுநீரகம் எப்பொழுதும் ஆரோக்கியமாகவே இருக்க வேண்டும்.

இன்று மாறிவரும் வாழ்க்கை முறை, துரித உணவுகள், தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் சிறுநீரகம் அதிகம் பாதிக்கப்படுகின்றது.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் மற்ற உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றது. மேலும் ரத்தத்தினை சுத்திகரிக்கும் பணியும் தடைபடும் என்பதால் இறுதியில் உயிருக்கே ஆபத்தையும் விளைவிக்கும்.

அதிலும் நீரிழிவு நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் பொழுது சிறுநீரக பிரச்சனையும் ஏற்படுகின்றது.

அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் சிறுநீரகத்தை பாதுகாக்க எந்த மாதிரியான உணவினை எடுத்துக் கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

எந்தெந்த உணவினை தவிர்க்கனும்?

பதப்படுத்தப்பட்ட உணவுகளான இறைச்சி, சிப்ஸ் இவற்றினை சாப்பிடக்கூடாது. ஏனெனில் பதப்படுத்தப்பட்ட உணவில் சோடியம், பிரிசர்வேட்டிவ் மற்றும் கெடுதலான கொழுப்பு அதிகளவில் இருக்கின்றது. இவை சிறுநீரகத்தில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

அதிகப்படியான உப்பு சேர்க்கப்பட்ட உணவினை கட்டாயம் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஸ்நாக்ஸ், சிப்ஸ் உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றிலும் சோடியம் அதிகமாகவே இருக்கின்றது.

நீரிழிவு நோயாளிகளே! சிறுநீரகத்தினை ஆரோக்கியம் வைத்துக் கொள்ளனுமா? இந்த தவறை செய்யாதீங்க | Kidney Damage For Diabetics Patient Diet Tips

இனிப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். ரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும்.

 

புரதச்சத்து உடம்பிற்கு ஆரோக்கியம் என்றாலும், நீரிழிவு நோயாளிகள் புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை குறைவாக சாப்பிடவும். ஏனெனில் புரதம் அதிகரிக்கும் போது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்.

 

நீரிழிவு நோயாளிகளே! சிறுநீரகத்தினை ஆரோக்கியம் வைத்துக் கொள்ளனுமா? இந்த தவறை செய்யாதீங்க | Kidney Damage For Diabetics Patient Diet Tips

தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம் ஆகும். சரியான அளவில் தண்ணீர் பருகவில்லையெனில், உடம்பில் நீர்ச்சத்து குறைந்து சிறுநீரக பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

 

நீரிழிவு நோயாளிகளே! சிறுநீரகத்தினை ஆரோக்கியம் வைத்துக் கொள்ளனுமா? இந்த தவறை செய்யாதீங்க | Kidney Damage For Diabetics Patient Diet Tips

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *