உலகம்

அமெரிக்க, இஸ்ரேலுடன் செயற்பட்ட 25 ஈரானியர்கள் கைது

ஈரானின் மார்கஸ் மாகாணத்தில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு புலனாய்வு அமைச்சு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள், இராணுவ நிலைகளின் இருப்பிடத் தரவுகளை இஸ்ரேலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சர்வதேச ஊடகத் தளமொன்றுடன் பகிர்ந்து கொண்டதாகவும், தெருக்களில் கலவரத்தை தூண்ட முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தவிர, வடகிழக்கு மாகாணமான கோலேஸ்தானில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பொலிஸ் நிலையங்களைத் தாக்க திட்டமிட்டதாக மெஹ்ர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் முகவர்களாக செயற்பட்டதாகக் கருதப்படும் வெளிநாடுகளில் வசிக்கும் 15 ஈரானியர்களின் குற்றச் செயல்கள் ஆவணப்படுத்தப்பட்டு, அந்தத் தகவல்கள் நீதித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா அல்லது இஸ்ரேலுடன் தொடர்புடைய அமைப்புகளுடன் ஒத்துழைக்க வேண்டாம் என வெளிநாடுகளில் வாழும் ஈரானியர்களுக்கு ஈரான் அதிகாரிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு ஒத்துழைத்தால், ஈரானில் உள்ள அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *