உலகம்

English Channel வழியாக சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகை அதிகரிப்பு – எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனம்

பிரித்தானியாவின் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான விமர்சனங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், English Channel வழியாக நடைபெறும் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

English Channel வழியாக சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் குடியேற்றக்காரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, அரசின் எல்லை பாதுகாப்பு திட்டங்கள் செயலிழந்துள்ளமை எடுத்துக்காட்டுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில், எல்லை பாதுகாப்பு பொறுப்பில் இருந்த உயர் அதிகாரி ஒருவர் பதவி விலகியுள்ளார். இந்த ராஜினாமா, நிலைமையை சரியாக கையாள முடியாததற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

அரசின் குடியேற்றக் கொள்கைகள் முறையாக செயல்படவில்லை என்றும், எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த அவசர நடவடிக்கைகள் தேவை என்றும் எதிர்க்கட்சிகள், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும், இந்த பிரச்சினை தேசிய பாதுகாப்பு தொடர்பான கவலைகளையும் எழுப்பியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

அரசு தரப்பில் இருந்து, சட்டவிரோத குடியேற்றத்தை குறைக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், English Channel பகுதியில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English Channel வழியாக குடியேற்றவாசிகளின் வருகை மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஏற்பட்டுள்ள சவால்கள், அரசுக்கு பெரும் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *