இலங்கை

வடக்கில் மீண்டும் அச்சமான சூழ்நிலை; சிறிநேசன் எம்.பி.தெரிவிப்பு 

யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் மற்றும் வடக்கு மக்கள் மத்தியிலும் மீண்டும் அச்சமான சூழ்நிலையை உருவாகியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.சிறிநேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  நடைபெற்ற கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் ஒழுங்குவிதிகள் திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது சிறிநேசன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். மீண்டும் மாணவர்கள் மத்தியிலும் வடக்கு மக்கள் மத்தியிலும் அச்சமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் செயற்பாடுகளில் குறைபாடுகள் இருப்பின் அதற்கான காரணங்களை ஆராய்ந்து அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது அந்த மாணவர்கள் தமது மீண்டும் அச்சுறுத்தலான சூழ்நிலை உருவாகியுள்ளதாக கூறியுள்ளனர். இந்த விடயத்தில் கவனம் செலுத்தி முற்போக்கான சிந்தனையில் அதனை திர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *