பலதும் பத்தும்

இரவில் ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? சாக்லேட் சாப்பிட்டால் இனி தூக்கம் வரும்!

தூக்கமின்மை என்பது இன்றைய தலைமுறையின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

இதற்காக மாத்திரைகளை நாடுவதற்குப் பதிலாக, சாக்லேட், சூயிங் கம் போன்ற நொறுக்குத் தீனிகள் மூலம் தூக்கத்தைத் தேடும் புதிய கலாசாரம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.

என்ன இந்த ‘ஸ்லீப் சாக்லேட்’?

அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஆலிஸ் மஷ்ரூம்ஸ்’ போன்ற நிறுவனங்கள், காளான்களில் இருந்து எடுக்கப்படும் சத்துக்களைக் கொண்டு பிரத்யேக சாக்லேட்டுகளைத் தயாரிக்கின்றன.

ரெய்ஷி காளான்கள் (Reishi Mushrooms), கெமோமில், மெக்னீசியம் மற்றும் எல்-தியானைன் (L-Theanine) என்பன

முக்கிய பொருட்ளை கொண்டு இந்த சாக்லேட் தயாரிக்கப்படுகின்றது.

இவை உடலில் தூக்கத்தைத் தூண்டும் ‘மெலடோனின்’ ஹார்மோன் உற்பத்தியை இயற்கையாக அதிகரிக்க உதவுகின்றன.

தூக்கத்திற்காகச் சாக்லேட் சாப்பிடுவது ஒரு ‘வெகுமதி’ (Reward) போல உணரப்படுவதால், மக்கள் இதை மாத்திரைகளை விட அதிகம் விரும்புகிறார்கள். இருப்பினும், இதில் சில அறிவியல் சிக்கல்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

சாக்லேட் நிறுவனங்கள் 15 நிமிடங்களில் பலன் கிடைக்கும் என்கின்றன, ஆனால் மெலடோனின் வேலை செய்ய பொதுவாக 2 மணிநேரம் ஆகும்.

காளான்கள் மற்றும் எல்-தியானைன் ஆகியவற்றின் தூக்க நன்மைகள் குறித்த ஆய்வுகள் இன்னும் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளன.

இது தூக்கத்தைத் தரும் என்று மக்கள் நம்புவதாலேயே சிலருக்குத் தூக்கம் வரலாம்.

சாக்லேட் வடிவில் இருப்பதால், மக்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாகச் சாப்பிட வாய்ப்புள்ளது.

இது நரம்பியல் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒரே நாளில் பலவிதமான தூக்க சப்ளிமென்டுகளை எடுக்க வேண்டாம்,தூக்கமின்மைக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய முயலுங்கள்; குறுக்குவழிகளை மட்டும் நம்பாதீர்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *