பலதும் பத்தும்

ரயிலில் முதல் வகுப்பே இருக்கக்கூடாது

சுவிஸ் ரயில்களில் முதல் வகுப்பே இருக்கக்கூடாது எனக்கோரும் பிரச்சாரம் ஒன்று சுவிட்சர்லாந்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

Transport and Environment Association என்னும் ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்தவர்கள், சுவிஸ் ரயில்களில் முதல் வகுப்பே இருக்கக்கூடாது என்னும் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்கள்.

முதல் வகுப்பை நீக்குவதால், ரயிலில் பயணிகளுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என்று கூறியுள்ள அந்த அமைப்பினர், குறிப்பாக, அதிக பயணிகள் பயணிக்கும் ஜெனீவா முதல் லோசான் வரையிலான மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்களிலாவது முதல் வகுப்புப் பெட்டிகள் நீக்கப்படவேண்டும்.

அதாவது, அவை இரண்டாம் வகுப்பு பெட்டிகளாக மாற்றப்படவேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

சுவிஸ் ரயில்களில் முதல் வகுப்பை நீக்கக்கோரும் புகார் மனுவில் இதுவரை 12,000க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளார்கள்.

இதற்கிடையில், ரயில்களில் முதல் வகுப்பை நீக்குவது தொடர்பில் மக்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் காணப்படும் கூட்ட நெரிசலைப் பார்க்கும்போது, ரயில்களில் முதல் வகுப்பை நீக்குவது நல்ல யோசனைதான் என சிலர் கூறுகிறார்கள்.

அதே நேரத்தில், முதல் வகுப்பு என்பது நியாயமான ஒன்றே, ஏனென்றால், அதில் பயணிக்கும் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்துகிறார்களே என்கிறார்கள் சிலர்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *