உலகம்

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மாலத்தீவு எதிர்க்கட்சி தலைவர்!

மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் (எம்.டி.பி.) தலைவரும் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான 64 வயதான அப்துல்லா ஷாஹித், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றச்சாட்டின் கீழ்  இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்நாட்டு நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டைத் தொடர்ந்து, தலைநகர் மாலேயில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இரவு சுமார் 10.00 மணியளவில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

18 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவே அப்துல்லா ஷாஹித் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வழக்கு தொடர்பான மேலதிக விவரங்களை மாலத்தீவு பொலிஸார் வெளிப்படுத்தாத போதிலும், விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளனர்.

கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னர் சமூக வலைத்தளங்களில் பதிவொன்றை வெளியிட்டிருந்த அப்துல்லா ஷாஹித், தன் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் அவதூறானவை எனக் குறிப்பிட்டுள்ளதுடன், தன்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *