பலதும் பத்தும்

உடல் வலுப்பெற பாரம்பரிய கருப்பு உளுந்து களி; எப்படி செய்வது?

உளுந்தைகளி சாப்பிடுவதனால் உடலுக்கு மற்றும் எலும்புக்கு வலிமை தரவும், கர்பப்பை வலு பெறவும் உதவுகின்றன.

அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த பாரம்பரிய கருப்பு உளுந்தங்களி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கருப்பு உளுந்து- 1 கப்
  • பச்சரிசி- 2 ஸ்பூன்
  • ஏலக்காய்- 2
  • வெல்லம்- 1 கப்
  • நல்லெண்ணெய்- 1 கப்

செய்முறை

முதலில் ஒரு வாணலில் கருப்பு உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் அதே வாணலில் பச்சரிசி சேர்த்து வறுத்து ஆறவைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த உளுந்து, அரிசி, ஏலக்காய் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் கரைத்த வெல்லத்தை அரைத்த மாவுடன் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும்.

இதில் அவ்வப்போது நல்லண்ணெய் சேர்த்து ஓட்டாமல் வரும்வரை கிளறி இறக்கினால் ஆரோக்கியம் நிறைந்த கருப்பு உளுந்து களி தயார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *