உலகம்

கால்நடையாக அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த கனடியர் கைது

கால்நடையாகக் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயன்ற 28 வயது கனடியர் ஒருவர் அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும், இன்னும் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படாத கோர்டி ஹோவ் சர்வதேச பாலத்தை (Gordie Howe International Bridge) இந்த கனடியர் கடக்க முயற்சித்துள்ளார்.

கடந்த மார்ச் 6 அன்று, கனடாவிலிருந்து பாலத்தின் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்த இந்த நபரை அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

விசாரணையில், அந்த நபருக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்றப் பின்னணிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீண்டும் கனடாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும், அவர் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையாத, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத இந்தப் பாலத்தில் அந்த நபர் எப்படி நுழைந்தார் என்பது குறித்து கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் (CBSA) மற்றும் விண்ட்சர்-டெட்ராய்ட் பால ஆணையம் (WDBA) விளக்கம் அளிக்கக் கோரப்பட்டுள்ளது.

இதேபோல கடந்த 2025 இலையுதிர் காலத்திலும் ஒரு சரக்கு லாரி அனுமதியின்றி இந்தப் பாலத்திற்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தப் பாலம் சோதனைக் கட்டத்தில் உள்ள நிலையில், 2026 வசந்த காலத்தில் இது முழுமையாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *